உலகம்

அமெரிக்காவுடன் உத்தியோகப்பற்ற பேச்சு; உறுதிப்படுத்தியது தலிபான்

 

அமெரிக்காவுடன் உத்தியோகப்பற்ற வகையில் தமது அமைப்பு பேச்சுக்களை நடத்திவருவதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

தலிபான் அமைப்பு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாடொன்றை செய்துகொள்ள விரும்புவதால் அதனுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது திடீர் ஆப்கான் பயணத்தில் அறிவித்ததையடுத்து தலிபான்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான சமாதானப்பேச்சுகள் முறிவடைந்த நிலையில் நேற்று அமெரிக்காவின் பாரம்பரிய நன்றியறிதல் நாளை முன்னிட்டு திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்க ஜனாதிபதி அங்குவைத்து இந்த புதிய செய்தியை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தனது பயணத்தில் ஆப்கான் அரச அஷ்ரப் கானியை சந்தித்து ஆலோசனை நடத்திய ட்ரம்ப்இ பின்னர் காபூல் நகரிலிருந்து இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பக்ராம் வான்தளத்துக்கு அவருடன் சென்று அங்குள்ள அமெரிக்கத் துருப்புகளை சந்தித்தார்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியதற்காக அனைத்து அமெரிக்க படை வீரர்களுக்கும் இருவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

அந்தவேளை அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலிபான்களுடள் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புவதாகவும் நிச்சயமாக இது பயனுள்ள விடயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.