உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; அறுவர் பலிஅமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தின் ஜெர்ஸி நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர்.

யூத இனத்தவருக்குச் சொந்தமான ஒரு பல்பொருள் அங்காடியில் இந்தத் தாக்குதலில், இரண்டு துப்பாக்கிதாரிகளும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 12 மணியளவில், பொலிஸ் அதிகாரியொருவரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து வாகனம் ஒன்றில் குறித்த வணிக வளாகத்தை நோக்கி சென்று அங்கும் தாக்குதல்  நடத்த முயன்றனர்.

இதனை பொலிஸார் தடுத்துநிறுத்த முனைந்த போது கடும் துப்பாக்கிசமர் இடம்பெற்றது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமென தெரிவித்துள்ள அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதேசத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இன்றைய தினம் மாகாணத்தின் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.