உலகம்

அமெரிக்காவிலும் ‘கொரோனா’ வைரஸ் தாக்கம்சீனாவில் 9 பேரின் உயிரை குடித்த கொடிய வைரஸான ‘கொரோனா’ வைரஸ் தற்போது அமெரிக்காவpலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான்  நகரில் பரவிய வைரஸ் அறிகுறிகள் தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதhக அமெரிக்க சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நபர் சியாட்டில் வசிந்து வந்துள்ளதோடு, அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உயிரழந்துள்ள நிலையில்இ வைரஸ் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும்இ பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இவ்வைரஸ் பரவும் தன்மை கொண்டது.

இரண்டு நாட்களில் 440 புதிய  வைரஸ் தொற்றுகளுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் தென்கொரியாஇ தாய்லாந்துஇ ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவிய நிலையில் தற்போது அமெரிக்காவுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.