அமெரிக்காவின் தலையீடு குறித்து பாராளுமன்ற விவாதம்
இலங்கையின் பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக அடுத்தவாரம் பாராளுமன்ற விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்களது கோரிக்கையின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
அரசாங்கம். அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராகிறது.
குறிப்பாக சோஃபா என்ற பழைய அமெரிக்க ஒப்பந்தத்தை புதுப்பிக்க தூதரகத்தின் ஊடாக இரகசியமாக நடவடிக்கை எடுத்துவருகிறது.
இது இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து இந்த விவாதம் கோரப்பட்டிருப்பதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கூறினார்.