உலகம்

அமெரிக்கப் படை சிரியாவில் நிலைகொள்ளும் – ட்ரம்ப் அறிவிப்பு !

 

சிரியாவில் அமெரிக்கப் படையினரில் ஒரு பகுதியினர் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுவதுமாக மீளெடுக்கப்படுவார்களென அவர் அறிவித்த விடயம் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்த நிலையில் தற்போது அந்த முடிவை ட்ரம்ப் மாற்றிக்கொண்டு புதிய முடிவை அறிவித்திருக்கின்றார்.

இதற்கிடையே சிரியாவை விட்டு வெளியேறிச்சென்ற அமெரிக்கத் துருப்புகளின் வாகன தொடரணி மீது குர்திஷ் மக்கள் அழுகிய பழங்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து ஈராக் நோக்கி சென்ற அமெரிக்கப் படையினருக்கே இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கபட்டது.