இலங்கை

அமரர் தொண்டமானின் 106 வது ஜனன தினத்தையொட்டி விசேட நிகழ்வுகள் !

 

இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானுடைய 106 வது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் பழைய பாராளுமன்ற கட்டிட தொகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது.

அத்தோடு விசேட பூஜைகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் , ஊவா மாகண அமைச்சர் செந்தில் தொண்டமான், இ. தொ. கா. வின் பொதுச்செயலாளர் அனுசியா சிவராஜா உதவி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு நாட்டுக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த மதியழகன் ராஜ்குமாரை கொழும்பில் உள்ள இ. தொ .கா. தலைமை காரியாலயத்திற்கு அழைத்து திறமையினை ஊக்குவிக்கும்முகமாக 03 இலட்ச ருபா பெறுமதியான காசோலையையும் ஆறுமுகன் தொண்டமான் வழங்கி வைத்தார்

(பொகவந்தலாவ நிருபர்)