உலகம்

அப்பிளுக்கு 14 பில்லியன் டொலர் வரி14 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின், உத்தரவா னது, யதார்த்தத்தை மிஞ்சும் விடயமென அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவானது அரசியல் ஆதாயங்களை அடிப்படையாய்க் கொண்டது என அப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளதோடு, இந்த உத்தரவை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வரி விகிதங்களால் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டிலிருந்து பொருளாதார ரீதியாக அயர்லாந்து பயனடைந்துள்ளதாகவும், இந்த விடயமானது ஐரோப்பிய ஆணைக்குழுவின், தீர்மானத்திற்கு சவால்  விடும் வகையில் அமைந்துள்ளதாகவும் அப்பிள் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவானது தனது அதிகாரங்களை பயன்படுத்தி, அயர்லாந்தின் தேசிய சட்டத்தை மறுசீரமைக்க முயற்சிப்பதாகவும், இதன் விளைவாக சர்வதேச வரி முறையையும் மாற்ற  அந்த ஆணைக்குழு எத்தனிப்பதாகவும், இது வர்த்தக செயற்பாட்டில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் எனவும் அப்பிள் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், இது சர்வதேச வரிச் சட்டங்களை மீற முயற்சிக்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.