விளையாட்டு

அபராதத்தை ஏற்றார் தோனி !

நேற்றைய ஐ .பி.எல். போட்டியில் ஐ.பி.எல் லின் ஒழுங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட சென்னை அணியின் கெப்டன் மகேந்திர சிங் தோனிக்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் தெரிவித்துள்ளது. இந்த முடிவை தோனி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற நேற்றைய போட்டியின் போது கடைசி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பென்ஸ்டோக்ஸ் பந்து வீசினார். புல்டோசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்தை உடனடியாக நோ போலாக நடுவர் அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் நோ போல் தர மறுத்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த சாண்ட்னர் மற்றும் ஜடேஜா ஆகிய இரு பெட்ஸ்மன்களும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக இது போன்ற இக்கட்டான தருணங்களில், சாந்தமாக இருக்கும் டோனி, நேற்று ஆக்ரோஷப்பட்டார். மைதானத்திற்குள் வந்த டோனி, கள நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், நடுவர்கள் நோ போலாக அறிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த தோனி மீண்டும் பெவிலியனுக்கு திரும்பினார்.

எப்போதும் கூலாக இருப்பதால், ‘கேப்டன் கூல்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் இந்த செயலை எவரும் எதிர்பார்க்கவில்லை.

மிகுந்த அமைதியான சூழல், போட்டியின் கடைசி பந்தை விளாசிய சாண்ட்னெர் சிக்ஸர் அடித்து மிகவும் திரில்லிங்கான போட்டியில் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

சென்னை அணியின் திரில்லிங் வெற்றியைவிட, தோனியின் செயல்பாடே கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த போட்டியில் ஐ.பி.எல்லின் ஒழுங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட சென்னை அணியின் தலைவர் தோனிக்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் தெரிவித்துள்ளது. இந்த முடிவை தோனி ஏற்றுக்கொண்டுள்ளார் .