இலங்கை

அனைத்துக்கட்சித் தலைவர்களை அவசரமாக சந்திக்கிறார் ரணில் !

அனைத்துக் கட்சித்தலைவர்களை முக்கியமான சந்திப்பொன்றுக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் ரணில்.

வரும் புதன்கிழமை இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடக்கவுள்ளது .

நாட்டின் தற்போதைய அரசியல் , பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் முக்கியமான இதர விடயங்கள் குறித்தும் இங்கு ரணில் பேசவுள்ளார்.

உடனடி தேர்தல் ஒன்றுக்கு செல்வது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்களில் ஆராய்ந்து வருகிறது.