இலங்கை

அனுராதபுரம் மகாபோதியில் வழிபட்டார் கோட்டா..!

 

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ச , இன்று காலை அனுராதபுரம் மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டார்.

இன்று மாலை கண்டிக்கு செல்லும் கோட்டாபய அங்கும் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். கண்டி பிள்ளையார் கோவிலுக்கும் அவர் செல்லவுள்ளார்.