இலங்கை

அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய ஐக்கியம் – கொள்கை பிரகடன மாநாடு நீர்கொழும்பில் !

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தேசிய ஐக்கியம் எனும் கொள்கை பிரகடன மாநாடு இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், மதத்தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவன அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க , ஒரே நாடு பல்லினத்தன்மையும் சமத்துவமும் பூண்டதோர் இலங்கை தேசம் எனும் தொனிப்பொருளில் தமது தேசிய ஐக்கிய கொள்கையை பிரகடனப்படுத்தினார்.

-நீர்கொழும்பு செய்தியாளர்-