Breaking News

அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்கள் இன்று காலை மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை அட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்.ஜோன்டிலரி தோட்டப்பகுதியில் உள்ள லயன் குடியிருப்பில் அறை ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபருக்கு அட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அட்டன் குற்றத் தடுப்பு பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

( நோர்ட்டன் பிரிட்ஜ் செய்தியாளர் )