Breaking News

அந்தாட்டிக்காவில் முதன்முறையாக 36 பேருக்கு கொரோனா தொற்று

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டார்டிகா பகுதியில் இருந்து நாடு திரும்பியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிலியில் உள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்டார்டிக்கில் உள்ள அனைத்து முக்கிய ஆராய்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.