Breaking News

அத்தியாவசியமானவை தவிர்ந்த இதர கடைகளை பூட்ட மட்டு அரச அதிபர் உத்தரவு

 

-க- சரவணன் —

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் போது அத்தியாவசிய கடைகளை தவிர ஏனைய அனைத்து கடைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டப்படவேண்டுமென அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா சகல பிரதேச செயலாளர்களுக்கும் இன்று புதன்கிழமை (08) பணிப்புரை விடுத்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது இந்த நிலையில் கொரோனா தோற்று நோயை தடுக்கும் செயலணித் திட்டத்தின் கீழ் சனநெரிசல்களை தடுப்பதற்கும் சமூக இடைவெளியை பேணவேண்டியதன் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கமைய நாளைய தினம் வங்கி, மருந்தகங்கள் , பலசரக்கு கடைகள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை தவிர ஏனைய அனைத்துக்கடைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டப்படவேண்டுமெனவும் அதனை மீறி திறக்கப்படும் கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்
– அதற்கு பொலிசார் இராணுவத்தினரின் பங்களிப்பை பெற்று செயற்படுமாறும் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்களுக்கும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.