இலங்கை

அதிரடி தாக்குதல் நடத்தி மரணதண்டனை கைதிகள் சிலரை மீட்க முயற்சியா? – விசாரணைக்கு உத்தரவிட்டார் மைத்ரி !

மரணதண்டனை விதிக்கப்பட முன்னர் மரணதண்டனை கைதிகள் சிலரை அதிரடியாக மீட்கும் இரகசியத் திட்டம் ஒன்று அம்பலமாகியதையடுத்து -அது தொடர்பில் விசேட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சயனைட் குப்பிகள் மற்றும் ஊசிகள் சிறைச்சாலை வளவில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இவற்றை செலுத்தி அந்த கைதிகளை மீட்கும் முயற்சிகள் நடந்தனவா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

அதுபோல சிறைச்சாலை வளவுக்குள் சில ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் சிறையில் கைதிகளாக உள்ள முன்னாள் இராணுவத்தினரை பயன்படுத்தி அதிரடி தாக்குதல் நடத்தி மரணதண்டனை கைதிகளை காப்பாற்ற மேற்கொண்ட மற்றுமொரு இரகசிய திட்டம் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து சிறைச்சாலையில் ஆயுதங்களை தேடி விசேட நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.