Breaking News

அதிரடி கைதுகள் தொடர்கின்றன ! மருதமுனை – மலையகத்தில்.

 

லிந்துலை இராணிவத்தையில் முஸ்லிம் பெண் ஒருவர் நேற்றிரவு 8 மணியளவில் கைது.

கையிலிருந்த பயணப்பையில் சிலுவை மாலையும், கத்தோலிக்க புத்தகங்களும் இருந்ததாக லிந்துலை பொலிஸ் பொறுப்பதிகாரி தகவல் .

மருதமுனையில் கைது !

கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சந்தேகத்தின் பேரில் மருதமுனையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிம் கார்ட்டுக்களை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டில் உள்ள ஒருவர் இதில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னுமொருவர் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில் சில தினங்களுக்கு முன்னர் அறை ஒன்றை 75 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்து தங்கியது ஏன் என்றும் விசாரிக்கப்படுகிறது.

கைதானோரில் காலஞ்சென்ற  அரசியல் தலைவர் ஒருவரின் மருமகன் ஒருவரும் இருப்பதாக பொலிஸ் சொல்கிறது.