விளையாட்டு

அண்டி மரே இரட்டையர் போட்டியில்

 

குயின்ஸ் க்லப் டென்னிஸ் தொடருக்கான இரட்டையர் போட்டியில் பிரபல வீரர் அண்டி மரே, ஜோன் செபஸ்டியன் கபால் மற்றும் ரொபர்ட் ஃபரா ஆகியோரை எதிர்த்தாடவுள்ளார்.

மரேயுடன் பெலிசியானோ லோபஸ் ஜோடி சேர்கிறார்.

32 வயதான அண்டி மரே இரண்டு தடவைகள் விம்பில்டன் பட்டம் வென்றவர்.

இந்த வருட ஆரம்பத்தில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் விளையாடாதிருந்தார்.

தற்போது அவர் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கிறார்.

இந்த தொடர் நாளையதினம் ஆரம்பமாகவுள்ளது.