உலகம்

அணு விருத்தி எல்லையை மீறிய ஈரான்

 

உலக வல்லரசுகளால் 2015ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அணு விருத்தி எல்லையை ஈரான் மீறியுள்ளது.

உலக கண்காணிப்பு குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் 2015ம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி 300 கிலோகிராம் யுரேனிய விரிவாக்கலுக்கான எல்லை நிர்ணிக்கப்பட்டது.

இதனை ஈரான் தற்போது மீறி இருப்பதாக, சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலீடாக ஈரான் யுரேனிய விரிவாக்கல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.