Breaking News

அட்டன் வாகன விபத்தில் இருவர் படுகாயம் !

 

நோட்டன்பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பளையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேனும், கொட்டகலையிலிருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற சிறிய ரக லொறியுமே இன்று பிற்பகல் நோருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

விபத்தினால் லொறியின் சாரதியும் லொறியில் சென்ற மற்றொருவருமே காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேனில் பயணித்த ஐவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.