Breaking News

அட்டன் – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி

 

நுவரெலியாவில் இருந்து நீர்கொழும்பு பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் கினிகத்தேன பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை 11மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியை சேர்ந்த 22வயதுடைய எம்.பி.அஸ்வின் என்ற இளைஞனே விபத்தில் உயிர் இழந்துள்ளதாக ஆரம்பகட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கார் சாரதி அட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

-பொகவந்தலாவை நிருபர்-