Breaking News

”அடுத்தகட்டத்தை தேர்தல் ஆணைக்குழு கூடித் தீர்மானிக்கும்” – மஹிந்த தேசப்பிரிய

 

“தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் நாளை காலை அது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானங்களை எடுக்கும்.இப்போதே ஒன்றும் சொல்ல முடியாது.ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வருவார்கள்.அடுத்த கூட்டம் எட்டாம் திகதி நடத்த இன்று காலை ஆணைக்குழு கூடியபோது தீர்மானிக்கப்பட்டது.ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து நாளை காலை ஆணைக்குழு கூடும்.பின்னர் முடிவை அறிவிப்போம் .அதற்கும் அவசரப்படாதீர்கள்..”

இவ்வாறு சற்றுமுன் ”தமிழன்” செய்திகளிடம் சொன்னார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய