இலங்கை

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நாளை உயர்நீதிமன்றத்தின் விசேட ஆயம் முன் பரிசீலனை !

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஐ.ஜி.பி பூஜித்த ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் ஏழு நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் முன் நாளை விசாரிக்கப்பட உள்ளன.

இந்த மனுக்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகக் கருதி ஏழு பேர் கொண்ட ஆயத்தை நியமிக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய முன்பு தீர்மானித்திருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய தலைமையிலான நீதியரசர்மார் புவனேக அலுவிஹாரே , சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, பிரசன்ன ஜெயவர்தன, பிரியந்த ஜெயவர்த்தன டி.பி. தெஹிதெனிய மற்றும் முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட ஏழு உறுப்பினர்கள் ஆயத்தின் முன் இந்த மனுக்கள் நாளை (12) விசாரிக்கப்படும்.

கடந்த ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏழு பேர் கொண்ட ஆயத்தை இறுதியாக அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது