Breaking News

அடிப்படைவாத அமைப்புக்கள் தடைசெய்யப்பட சுதந்திரக்கட்சி கோரிக்கை !

 

புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமை போல தேசிய தௌஹீத் ஜமாத் போன்ற அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கோருவதாக அதன் செயலாளர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

தாக்குதல் எச்சரிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு தரப்பில் தெரியப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட தயாசிறி பொலிஸ் மா அதிபர் மீது இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்ட இதர அதிகாரிகள் குறித்தும் கவனிக்க வேண்டுமென கோரினார் தயாசிறி .