சினிமா

அஜித்தின் “வலிமை” பட ஷுட்டிங் வெளிநாட்டிலா..? படக்குழு அதிரடி முடிவு

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தில் புதிய அப்டேட்டாக ஒரு சின்னத்திரை பிரபலம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் உள்நாட்டிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “வலிமை” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் டுவிட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்

ஆனால் ரசிகர்களின் கோரிக்கைக்கு இதுநாள் வரை பதில் இல்லை என்பதும் கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அப்டேட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் தகுந்த நேரத்தில் “வலிமை” படத்தின் அப்டேட் வரும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனமான யுனைட்டட் இந்தியா அதிக தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளதாகவும் அஜித்தின் முந்தைய படங்களை விடவும் இப்படம் அதிகவிலைக்குப் போயுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் அஜித்துடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துவரும் இப்படம் கோடையில் வெளிவரும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்று வரும் அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படம் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகிறது. இதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் வலிமை படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.எனவே இப்படத்தில் ஷூட்டிங் ஹைதராபாத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான ராஜஸ்தான் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கொரொனா 2 வது அலைபரவலைத் தொடர்ந்து வெளிநாடுகளில் படப்பிடிப்பு வேண்டாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் உளநாட்டிலேயே மொத்த படப்பிடிப்புகளையும் வைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளதாகத் தெரிகிறது.