Breaking News

‘அசாத் சாலி சொன்னவை உண்மைதானா ?’ – நாளை விளங்கப்படுத்துவேன் என்கிறார் ஹிஸ்புல்லாஹ்

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று ஆஜரான மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தார்.தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுடன் கடந்த தேர்தல் காலங்களில் ஒப்பந்தமொன்றை செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் எமது செய்திப்பிரிவு கேட்டது.அப்போது அவர் கூறியதாவது ,

முன்னைய தேர்தல் காலங்களில் அப்படியான ஏற்பாடுகள் நடந்திருந்தன.அதைத்தான் அசாத் சாலி கூறியிருக்க கூடும்.எப்படியோ நாளை மாலை 5 மணிக்கு நான் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளேன்.அப்போது எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவேன் – என்றார் ஹிஸ்புல்லாஹ்