விளையாட்டு

அசத்தல் துடுப்பாட்டம், பங்களாதேஸ் அபார வெற்றி.

 

 

இந்தபோட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 321ஓட்டங்களைப் பெற்றது.

சாய் ஹோப் 96 ஓட்டங்களையும், எவின் லெவிஸ் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலளித்தாடிய பங்களாதேஸ், ஆரம்பம் முதலே நிதானமாக துடுப்பாடியது.

322 என்ற பெரிய ஓட்ட இலக்கை 51 பந்துகள் மீதமிருக்க 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியீட்டியது.

சகிப் அல் ஹசன் 124 ஓட்டங்களுடனும், லிட்டன் தாஸ் 94 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தனர்.