உலகம்

அகதிகளுக்காக ஜனநாயகக் கட்சியினர் நிதி ஒதுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான அகதிகள் அநாதரவான நிலையில் தங்கி உள்ளனர்.

அங்கு சில மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பலர் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக 4.5 பில்லியன் டொலர்கள் நிதியை வழங்கும் தீர்மானத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் நிறைவேற்றியுள்ளனர்.

எனினும் இந்த தீர்மானம் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் பெரும் சவாலை எதிர் நோக்கும் என தெரிவிக்கப்படுகிறது.