விளையாட்டு

ஃப்ரென்ச் ஓபனில் ரொஜர் ஃபெடரர்

இந்த மாதம் ஆரம்பமாகின்ற ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் ரொஜர் ஃபெடரர் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2016ம் ஆண்டு முதுகுவலி காரணமாக ஃப்ரென்ச் ஓபனில் இருந்து விலகிய அவர், அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் இந்த தொடரில் விளையாடவில்லை.
தற்போது அவர் பெரும் சவால்களுக்கு மத்தியில் ஃப்ரென்ச் ஓபனில் பங்குபற்றவுள்ளார்.
அதேநேரம், இந்த தொடரை இலக்கு வைத்து ரஃபாயல் நடால் மற்றும் நவோக் ஜொக்கோவிக் ஆகியோர் கடுமையான போட்டியை வழங்கவுள்ளனர்.
நடால் தமது 12வது ரோலண்ட் கரோஸ் பட்டத்தை துரத்தும் அதேநேரம், ஜொக்கோவிக் இந்த தொடரில் வென்றால், இரண்டாவது தடவையாகவும் நான்கு க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஒன்றாக வென்றவர் என்ற சாதனையை படைப்பார்.